எப்படித் தப்பிடுவாய்
eppadith thappiduvaay
எப்படித் தப்பிடுவாய் தண்டனைக்கு எப்படித் தப்பிடுவாய் இப் பெரிதான இரட்சிப்பை வீணாய் இப்படி அசட்டை செய்துவிட்டால்
அற்புதமான தல்லோ - மீட்பு அதிசயமான தல்லி தற்பரனின் சுதன் தரணியில் வந்து தம்மையே உனக்காய்த் தந்தனரே
காலங்கள் பலவாய் கர்த்தர் காத்து நிற்கின்றாரே கர்த்த சாலவே நிர்விசாரமாய் நீயும் காலத்தை வீணாய்க் கடத்திவிட்டால்
திரு உதிரம் சிந்தி - உன்னைக் கிருபையினால் மீட்டார் குருசிடம் வந்து உருகுமுன் னுள்ளம் ஊற்றாயோ பாவம் மாற்றாயோ