எப்படி நீ தப்பிருவாய் இறுதிகாலத்தில்
eppadi nee thappiruvaay irudhigaalathil
எப்படி நீ தப்பிருவாய் இறுதிகாலத்தில் மரண தூதன்சிங்கம் போல் சீறிவருகிறான்
எத்தனை நாள் இருப்பாயென்று உனக்குத் தெரியுமா எந்த நேரமோ எந்த வேளையோ மரணம் வருவதறியமாட்டாய் மதியினுட்பத்தால்
வாலிப வயது மங்கை பருவ வயதிலோ நடு வயதிலோ நல்ல பெலத்திலோ மரணம் வருவதறியமாட்டாய் மதியினுட்பத்தால்
நடுவயதில் நல்ல கல்வி முடிக்கும் வேளையில் களிப்பின் நேரத்தில் கலியாண நேரத்தில் மரணம் வருவதறியமாட்டாய் மதியினுட்பத்தால்
மரித்தால் எங்கு போவாய் என்று உனக்கு தெரியுமா மனித சிருஷ்டியில் மகிழும் ஆத்தும் இரட்சை பெற கர்த்தன் இயேசு மரித்துயிர்த்தாரே
பாவத்தின் பலன் நரகம் சம்பளம் மரணம் பாவ நெஞ்சமே நீ பதறமாட்டாயோ மரித்த பின்பு மனந்திரும்பும் செயலிருக்காது
இன்று பாவி உன்னை இயேசு வருந்தி அழைக்கிறார் விரும்பி வாராயோ நெருங்கி சேராயோ வருந்தி அழைக்கும் இயேசு முகம் திரும்பி பாராயோ