என்னோடு வாழ்ம் என்
ennodu vaazhm en
என்னோடு வாழும் என் இயேசு நாதன் என் வாழ்வில் பெலனாகினார்
கண்மூடி நானும் கால் மாறும் வேளை கை நீட்டி வழி காட்டினார்
மண்மீது நானும் தவிக்கின்ற போது விண்ணின்றும் இரங்கி வந்தார் பண்ணோடு நானும் துதி பாடும் போது கலங்காதே எனத் தேற்றினார்
என்நாளும் வந்து என் இயேசு ராஜன் என்னோடு உறவாடுவார் முன்நாளில் செய்த என் பாவம் நீக்கி தன்னோடு உறவாக்கினார்
கண்மூடும் வேளையிலும் கலங்காதே என்று என் கண்ணீரைத் துடைக்கின்றவர் சொந்தங்கள் எல்லாம் இனி நானே என்று என் வாழ்வில் இறையானவர்