என்னோடு பேசும் இயேசுவே
ennodu pesum yesuvae
என்னோடு பேசும் இயேசுவே-(2) நீர் வந்து பேசாதிருந்தால் என் வாழ்க்கை தொலைந்துபோகுமே என் வாழ்க்கை சிதைந்து போகுமே-(2)
தந்தை தன் குழந்தை கூட பேசாதிருப்பாரோ தாயும் குழந்தை கேட்க கொஞ்சாதிருப்பாளோ-(2) நான் உந்தன் குழந்தை அல்லவோ என்னோடு பேசமாட்டீரோ ?-(2)
உம் வார்த்தையாலே கடல் தலைகுனிந்தது உம் வார்த்தையாலே காற்று திரும்பிப் போனது-(2) அவைகளோடு பேசினீரே என்னோடு பேசமாட்டீரோ-(2)