எண்ணிமுடியாத அதிசயங்கள்
ennimudiyaadha adhisayangal
எண்ணிமுடியாத அதிசயங்கள் என் வாழ்வில் செய்பவரே எண்ணிமுடியாத அற்புதங்கள் என் வாழ்வில் செய்பவரே -(2)
கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமோ -(2).
1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன். சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2)
இடைவிடாமல் காத்தீரையா உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா- (2) -(கோடி கோடி)
2.தனிமையிலே நான் அழுதபோதெல்லாம் - ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன். தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் - ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை போற்றிப் பாடுவேன்.-(2)
குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2)
3.சிறுமையும் எளிமையுமான என்னையும் - கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன். அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2)
புழுதியிலிருந்து எடுத்தீரையா - எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2)