எண்ணில்லாத கூட்டமாக
ennillaadha koottamaaga
1. எண்ணில்லாத கூட்டமாக ஆர்ப்பரிப்போர் இவர் யார்? எல்லா ஜாதிகள் ஒன்றாகக் கீதம் பாடும் இவர் யார்?
பல்லவி
இவர்கள் தம் ஆடையை தேவாட்டுக் குட்டியின் இரத்தத்தினில் தோய்த்து வெண்மை யானோர்கள் என்றென்றும் வாழ்வார் மோட்சத்தினில்.
2. நித்திய சிங்காசனத்தைச் சூழ்ந்து மா கெம்பீரமாய் ஆச்சரிய மீட்பின் அன்பைக் கூறுகின்றார் ஏகமாய்.
பல்லவி
இவர்கள் தம் ஆடையை தேவாட்டுக் குட்டியின் இரத்தத்தினில் தோய்த்து வெண்மை யானோர்கள் என்றென்றும் வாழ்வார் மோட்சத்தினில்.
3. பூலோகத்தின் துன்பமுற்று இன்ப லோகம் அடைந்தார் வெற்றிக் கிரீடம் சூடப் பெற்று வேந்தராக ஆள்கின்றார்.
பல்லவி
இவர்கள் தம் ஆடையை தேவாட்டுக் குட்டியின் இரத்தத்தினில் தோய்த்து வெண்மை யானோர்கள் என்றென்றும் வாழ்வார் மோட்சத்தினில்.
4. நம்முடைய தேவனாலே இரட்சிப்பென்று சொல்கின்றார் நாதர் இயேசுகிறிஸ்துவக்கு நமஸ்காரம் செய்கின்றார்.