எண்ணில்லா நன்மைகள் எனக்கு
ennillaa nanmaigal enakku
எண்ணில்லா நன்மைகள் எனக்கு செய்ததால் எந்தன் வாழ்வை தந்தேன் இன்ப இயேசுவே காலம் உள்ளவரை மறக்க முடியுமா உந்தன் தயவாலே இன்றென்னை நடத்துமே
மனம் போன போக்கிலே வாழ்ந்த மனிதன் நான்மறைவான நண்பனாய் என்னைக் காத்தீரே - வரைந்தீரே அன்பாலே வலங்கையில் என்னையே வாழ்நாள் என்றுமே உம்மை சேவிப்பேன்
தீய மனிதர் என்னை தூற்றி திரிந்தனர் தேவமைந்தன் என்னை தூக்கி எடுத்தீரே தந்தீரே கிருபைகள் அழைத்தீரே சேவைக்கே நன்றி சொல்லியே உம்மைப் பாடுவேன்
சொக்க வெள்ளியும் சுத்த பொன்னும் நீரே தான் - மண்ணின் தூளைப் போல் மனிதரை எனக்கு தாருமே - ஆசைகள் வேறில்லை உம் சித்தம் என் இன்பம் வருகைக்காய் ஆவலாய் காத்திருப்பேன்