எண்ணிலடங்குமோ நின் நன்மைகள்
enniladangumo nin nanmaigal
எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா எண்ணியே நன்றி யால் என்றென்றும் புகழ்வேன்
1. ஜீவனின் அதிபதியே - நீரெனக்கு ஜீவனில் ஆட்சி செய்ய வே ஜீவியக்காலமதிலும் - என்னேசுவே ஜீவித்து துதி சாற்றுவோன்
2. நீர் மகா தேவனல்லவோ - வான்புவியில் நீர் எந்தன் தேவனல்லவா ஒளஷதமானவரும் நீர் - என்னேசுவே செளக்கிய காரணரும் நீர்
3. நன்மைக்காய் யாவும் நிகழ் - இன்னமுமேன். என்னகம் துயர் கொள்வது நான் மாறா நிர்ணயமிதே - என்னேசுவே என்னிலே நிறைவேற்றும்
4. மாட்சியில் வருவீர் நீரே - என் சரீரம் ! மீட்பினை யளித்திடவே தோட்டம் உம் கிருபையாலே - என்னேசுவே நாட்டும் அத்தினம் வரையும்
5. இத்தனை ஓட்டம் முடித்து - யாத்திரையின் அக்கரை தனையடைந்தே சீயோனில் இணைந்தும்முடன் - என்னேசுவே சேவையே தொடர்ந்திடுவேன்