என்னில் வந்த நாதனுக்கு
ennil vandha naadhanukku
என்னில் வந்த நாதனுக்கு என்னைக் காக்கும் தேவனுக்கு நெஞ்சார் என்றும் நன்றி சொல்வேன் வாழ்வளித்த வள்ளலுக்கு வாழ்வளிக்கும் இயேசுவுக்கு வானெங்கும் முழங்க நன்றி சொல்வேன் நன்றி நன்றி என்றும் நன்றி சொல்வேன் - 2
பாவங்களைப் போக்கினார் நன்றி சொல்வேன் பயமதையே நிக்கினார் நன்றி சொல்வேன் ( 2 ) பரிவுடனே நோக்கினார் நன்றி சொல்வேன் பாதைதனைக் காட்டினார் நன்றி சொல்வேன் உண்மை அன்பு நிதியை உணரச் செய்த இயேசுவை உளமாரப் பாடியே நன்றி சொல்வேன் ( 2 ) - நன்றி . . . .
எளியவரை நோக்கினார் நன்றி சொல்வேன் ! ஏழைகளை நேசித்தார் நன்றி சொல்வேன் ( 2 ) அடிமைகளின் விலங்கொடித்தார் நன்றி சொல்வேன் உரிமை தரும் வளவயை உணரச் செய்த இயேசுவை ஆடியே பாடியே நன்றி சொல்வேன் ( 2 ) - நன்றி