என்னில் ஒரு நன்மையும்
ennil oru nanmaiyum
என்னில் ஒரு நன்மையும் இல்லையே ஏனோ எல்லாம் உம் கிருபை அல்லவோ
1. அர்ப்பணம் என்னில் உம் மா நோக்கம் நிறைவேற அற்புதமாய் என்னை அழைத்தது கிருபையே அன்பரே நித்தியமாய் நான் உந்தன் சொந்தம் - என்னில்
2. என் பலவீனங்களில் பரிந்து பேசும் நேசர் வன் கிருபையின் ஊற்றாய் சகாயம் நல்குவீர் கன்மலை கிறிஸ்துவே நீர் ஓர் போதும் கைவிடீர் - என்னில்
3. மலைகள் நிலைகள் மாறி பர்வதம் பெயரும் வேளை அலையாய் கிருபை என்னை அடுக்குதே நித்தியமாய் அசையா சீயோன் நிலைத்தோங்க செய்வீர் - என்னில்
4. ஆதி அப்போஸ்தலர் நல் உபதேசம் ஈந்து . ஆதி விசுவாசம் என்றால் பெருக செய்தீர் ஆதி காலம் போல் என்னை செழித்தோங்க செய்வீர்
5. பூரண கிருபை ஈந்து உன் சாயல் ஆக்கிடுவீர் பூரணரே உந்தன் வருகையும் சமீபம் பூரணமாய் என்னைச் சமர்ப்பிப்பேன் கனிந்திடும் - என்னில்