என்னில் என்ன நன்மை
ennil enna nanmai
என்னில் என்ன நன்மை கண்டீர் எனக்காய் உந்தன் ஜீவன் தந்தீர் உந்தன் அன்பை எண்ணிப் பார்க்கிறேன் என்னைத் தேடி வந்த தெய்வமே
பாவங்கள் ஏராளம் நான் செய்ததால் பாடுகள் அகோரமாய் மாற்றிய பாவி நான் ஏன் இந்த அன்பு என் மேல் ஏன் இந்த அன்பு
திரு ரத்தம் சிந்திய உம் திருமேனியின் காயங்கள் பார்த்ததும் என் கல் மனம் கரைந்து போகுதே ஏன் இந்த காயம் ஐயா ஏன் இந்த காயம்
ஏன் என்னை கைவிட்டீர் என கதரும் குரல் கேட்கிறேன் அப்பாவின் முகம் தேடி தவிக்கும் பிள்ளையாய் ஏன் இந்த கதறல் என்னை மீட்கும் தெய்வ குமுறல்