என்னிடம் வாவென்று
ennidam vaavendru
என்னிடம் வாவென்று - இயேசு இரு கையை நீட்டுகிறார் அழைக்கின்ற தேவனையே - என்றும் ஆண்டவராய் வணங்கு
வருத்தப்பட்டு தினமும் பாரத்தை நீயேன் சுமக்கின்றாய் (2) என்னிடம் வாருங்கள் இளைப்பாறுதல் தருவேன் என்றான் (2)
வார்;த்தையில் மாமிசமாய் - இயேசு மானிடனாய் உதித்தார் (2) ஆவியில் அசைவாடி எங்கள் உணர்விலும் வாழுகின்றார்; (2)
வேதத்தின் வார்;த்தையினால்- தேவன் ஜீவனைக் கொடுக்கின்றார் (2) அன்பால் எம்மை மீட்டு நல்ல வழியினைக் காட்டுகின்றார்; (2)
ஆண்டவர் இயேசுவிடம் - உன்னை அடைக்கலம் கொடுத்துவிட்டால் (2) உன்னையும் மீட்டுக் கொள்வார் நித்திய வாழ்வையும் தந்திடுவார்; (2)