என்னிடம் இருப்பவை யாவும் உன் கொடையே
ennidam iruppavai yaavum un kodaiyae
என்னிடம் இருப்பவை யாவும் உன் கொடையே என் வாழ்வும் இறைவனே உந்தன் கொடையன்றோ உம் திருக்கரத்தில் என்னை காணிக்கையாக்குகிறேன் - 2 உம் திருச்சித்தம் போல் பயன்படுத்தும் 2
கோதுமை மணிகள் மண்ணில் மடிந்து - நல்ல பயன்தரும் நிலை போல திராட்சைக் கனிகள் ஒன்றாய்ப் பிழிந்து பலம் தரும் சுவைமிகு இரசம் போல - 2 என்னைத் தருகின்றேன் ஏற்றிடுவாய் - உன் அன்பின் பலியாய் மாற்றிடுவாய்
வறியவர் வாழ்வில் வளமை நிறைய - மக்கள் நம்பிக்கை வலுப்பெறவே மனிதம் இழந்தவர்கள் நிமிர்ந்து மாண்புற உரிமைகள் மீட்டிடவே என்னைத் தருகின்றேன் ஏற்றிடுவாய் - உன் அன்பின் பலியாய் மாற்றிடுவாய்