எந்நேரமேயும் பாடுவேன்
ennerameyum paaduven
1. எந்நேரமேயும் பாடுவேன் விசாரம் நீங்கிற்றே இம்மானுவேலைப் போற்றுவேன் சந்தோஷமாயிற்றே. சங்கீதம் கீதம் கீதம் பாடுவேன் கீதம் கீதம் சங்கீதம் பாடுவேன்.
2. என் யேசுவைக் கல்வாரியில் நான் கண்டேன் அப்போது என்னாலுண்டான துன்பத்தைக் கண்டு கண்ணீர் விட்டேன். சங்கீதம் கீதம் கீதம் பாடுவேன் கீதம் கீதம் சங்கீதம் பாடுவேன்.
3. பொல்லாத சோதனை வந்தால் யேசுவைப் பாடுவேன் கண்ணீர் சொரியும் வேளையில் என்றும் நான் பாடுவேன் சங்கீதம் கீதம் கீதம் பாடுவேன் கீதம் கீதம் சங்கீதம் பாடுவேன்.
4. பேரன்பின் சுவிசேஷத்தை எல்லார்க்கும் தெரிவி பூமியெங்கும் புதுப்பாட்டு முழங்க நீ பாடு. சங்கீதம் கீதம் கீதம் பாடுவேன் கீதம் கீதம் சங்கீதம் பாடுவேன்.