என்னோடு இருப்பவரே
enneாtu iruppavarae
என்னோடு இருப்பவரே - இயேசுவே எனக்காக வாழ்பவரே கோடான கோடி உள்ளங்கள் தேடி பாடி மகிழ்ந்திடுமே - உம் பாதம் பணிந்திடுமே
1. என்னில் வாழ்வது நானுமல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றீர் கர்த்தர் என் பெலனும் கீதமுமானீர் கன்மலையுமானீர் கர்த்தாவே என் நிழலானீர் என் மறைவிடமாய் நீரானீர் அல்லேலூயா அல்லேலூயா - உம்மில் என்னை மறந்தேனய்யா
2. காற்றும் கடலும் கல்மழையும் கானம் பாடி போற்றுமே துள்ளிடும் ஆறும் பொங்கிடும் ஊற்றும் துயவர் புகழ் பாடுமே சிறகுகள் அடித்திடும் பறவையுமே சிந்தை குளிர்ந்திட துதித்திடுமே அல்லேலூயா அல்லேலூயா - நானும் சேர்ந்து துதித்திடுவேன்
3. சூரிய சந்திரன் நடசத்திரங்கள் சூழ்ந்து உம்மை போற்றுமே வானிலும் புூவிலும் உள்ளவை யாவும் வாழ்த்தி வலம் வருமே வானுக்கும் புூமிக்கும் உயர்ந்ததல்லோ வானவரே உம் மகிமையல்லோ அல்லேலூயா அல்லேலூயா - துதி கனம் மகிமை உமக்கே