என்னவோர் விந்தையிதே
ennavor vindhaiyidhae
என்னவோர் விந்தையிதே? தேவன் மா தேவன் ஜெனித்தார் எம்மைப் போலே - அற்புத தேவன்
1. விட்டார் விண்ணை அன்பினாலே மாட்டுத் தொழுவம் தாம் தெரிந்தார் நம்மை நேசித்த நேசத்தாலே - என்ன
2. கன்னிகையின் நற்பாலனவர் முன்னுரைப்படி நம்மை மீட்க உதித்தார் அற்புதம் அற்புதமே - என்ன
3. தாழ்மையின் ரூபமேன் இவர்க்கோ ? வாழ்வின் மேன்மை தானே தரிக்க தருணமவர்க்கு இல்லாமல் - என்ன
4. ஆச்சரியம் தூதர் வானத்திலே ஆசையாயத் துதி சாற்றுகிறாரதோ கேளுங்கள் விந்தையாம் விந்தையிதே - என்ன
5. செல்லுவோம் நாம் தீவிரமாய் சேவை புரிவோம் இயேசுவுக்கென்றும் எம்மை நேசித்த நேசத்தாலே - என்ன