என்னரும் சீயோனே
ennarum seeyonae
என்னரும் சீயோனே உன்னில் நான் சேர்ந்திட என்னகம் வாஞ்சையாய் காத்திடுதே என்று நான் காண்பேன் உன் தேவ மகிமையை அன்று என் ஆவலும் தீர்ந்திடும்
1. சீயோனே உன்னில் பிறந்தவர் நாமமே சீரிலங்க உன்னதன் நினைந்தே உன் தொகை எதனை எண்ணி ஸ்திரமாகி இன்னும் மென்மேலும் உயர்த்துவார் - என்னரும்
2. உன்னிமித்தம் தம்மை அண்ணகராக்கினோர் உத்தம ஸ்தானமும் கீர்த்தியும் என்றும் அழியாத மேன்மையுறும் நாமம் பெற்றுன்னில் ஆளுகை செய்திடுவார - என்னரும்
3. பூதலத்தோர் பாவங்களை எண்ணாது ஒப்புரவாக்கி கிறிஸ்துவே ஒப்பில்லாத இவ்வுபதேசத்தை உந்தன் அப்போஸ்தலரிடம் ஈந்தனரே - என்னரும்
4. சீயோனே உன்னை நேசித்த சித்தர் பலர் ஜீவனை பலியாய் வார்த்தனரே இக்கால பாடுகள் உந்தன் மகிமைக்கு எக்காலமும் இணையாகிடுமோ -என்னரும்
5. தேவ சித்தம் சம்பூரணமாய் இயேசு செய்ததினால் உம் நாயகனே வந்திடுவார் உன் வாஞ்சைகள் தீர்த்தென்றும் சொந்தமாய் உந்தனைக் கொண்டிடவே -என்னரும்
6. மெல்கிசேதேக்கின் முறைமையில் வந்த நித்தியமான ஆசாரியரே நெற்றியில் தாதியின் நாமம் தரித்தொன்றாய் சீயோனே உன் மீதில் வீற்றிருப்பார் -என்னரும்