என்னையும் உமதாட்டின் மந்தையோ
ennaiyum umadhaattin mandhaiyo
என்னையும் உமதாட்டின் மந்தையோ டேற்றுக் காத்திடும் யேசுவே!
1. வன்னியான தோர் அலகைப் பேய் தனை வதைத்திட ஞானப் பெலத்துடன் சிறந்து இந்நிலத்தினில் வந்துதித்த நல் யேசுவே எனைச் சேர்த்திடும். - என்னை
2. ஆயக்காரரோடு பாவிகளின் கும்பை அழைத்து நல்விதை முளைத்திட - வெகு நேயமாகவே ஜீவ புனல் ரூடவ்ந்த நிமலனே எனைச் சேர்த்திடும். என்னை
3. ஐயிருபது ஆட்டினில் ஒன்றகன்றிட்டால் மனம் உகந்து கோன் அதை மெய்யதாகவே தேடுவோன் என்ற மேய்ப்பரே எனைச் சேர்த்திடும்.
4. வாசலாகவே இருக்கிறேன் என்னால் வந்தவன் மனம் நொந்திடான் வெகு நேசமாகவே வாழ்வான் என்ற நல் நிமலனே எனைச் சேர்த்திடும். - என்னை
5. நல்ல மேயப்பன் நான் என மொழிந்த என் நாதனே ஞான போதனே - ஜீவ புல்லுள்ள ஸ்தானத்தன்னில் கொண்டெனைப் போஷித்து முசிப்பாற்றிடும். - என்னை