என்னையே கூப்பிடுவாய் மறுமொழி
ennaiyae kooppiduvaay marumozhi
என்னையே கூப்பிடுவாய் மறுமொழி கொடுத்திடுவேன் கடினமும் அறியாததும் காரியம் அறிந்திடுவாய்
சகல வியாதி வேதனையும் அகற்றி உன்னை குணப்படுத்தி ஆரோக்கிய வாழ்வு அளித்திடுவேனே உந்தன் பரிகாரியே ர்
உந்தன் துக்கம் மாற்றிடுவேன் களிப்பின் தொனியும் எழும்பிடுமே துதியொலி கேட்கும் மகிழ்ச்சியும் தங்கும் உன்னை விடுவிப்பேன் நான்
மேன்மையான வாக்குத்தத்தம் அருமையான வார்த்தைகளை நிறைவேற்றும் தேவன் நானே அறிவாய் உனக்கு செவிகொடுப்பேன்
வேத சத்தியம் அறிவதினால் தேவ நன்மை தங்கிடுமே சமாதானம் அருளி சவுக்கியம் அருளி உன்னை தாங்கிடுவேன