என்னைத் தேடி வந்த இயேசு தேவா
ennaith thedi vandha yesu devaa
என்னைத் தேடி வந்த இயேசு தேவா உம்மைத் தேடுகின்றேன் நாதா
1. உம்மை பிரிந்து நான் எங்குபோவேன் உம்மை மறந்து நான் எங்கு வாழ்வேன் (2) என் தாழ்வில் என்னை நினைத்தீரே உம் கிருபை என்றுமுள்ளதே (2)
2. நான் இருளில் படுக்கை போட்டாலும் உந்தன் வெளிச்சம் என்னை சூழ்ந்திடுமே என் வழிகள் யாவும் அறிவீரே உம் கிருபை என்றுமுள்ளதே
3. முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரத்தால் என்னை அணைத்தீரே உம் சமூகம் எனக்குப் போதுமே உம் கிருபை என்றுமுள்ளதே (2)
4. இந்த பூவில் நீர் எந்தன் வாஞ்சை உந்தன் சாயல் அடைவதென் மேன்மை உந்தன் மகிமை எனக்கும் அளித்தீரே உம் கிருபை என்றுமுள்ளதே (2)
5. முன்னறிந்து என்னை தெரிந்தெடுத்தீர் முழு - இதயம் தந்தேன என்னை நிறைத்தீர் இனி வேறு வாஞ்சை எனக்கில்லை உம் கிருபை என்றுமுள்ளதே (2)