என்னைத் தப்புவித்து
ennaith thappuvithu
என்னைத் தப்புவித்து என்னைத் தாங்கிடும் என்னை ஏந்திடும் தெய்வமே எத்தனை அன்பு நீர் என்னில் வைத்து பாராட்டும் தெய்வமே
(ஹாலேலுயா....) ஆராரிரோ... (4)
1.நெரிந்து போன இந்த நாணலை என்றும் முறியாதவர் மங்கியெரியும் இந்த திரியையும் என்றும் அணையாதவர்
2.நெருக்கப்பட்டடும் நான் ஒடுக்கப்பட்டும் மனமுறிவடைவதில்லை துன்பப்பட்டும் நான் தள்ளப்பட்டும் மடிந்து போவதில்லை
3.தாய் தன் பிள்ளையைத்தான் மறந்தாலும் நீர் என்னை மறந்ததில்லை உலகம்தான் என்னை வெறுத்தாலும் நீர் என்னை வெறுக்கவில்லை