என்னைக் காப்பார்
ennaik kaappaar
என்னைக் காப்பார் மார்போடணைப்பார் கண்ணீர் துடைப்பார் தயை கூர்வார் எனக்கென்றும் இயேசு மாத்திரம் என்னை மீட்ட கர்த்தர் மாத்ரம் என் பிரியர் இயேசு மாத்ரம்
எந்தன் கால்கள் சறுக்கும் போது உம் கிருபை என்னை தாங்கிடுதே இருள் என்னில் வராதென்றுமே சத்திய வெளிச்சம் பாதுகாக்கும்
நிலையில்லா எந்தன் வாழ்வினிலே நிலையான ஜோதியானீர் நிர்மலா யேகோவா நிசி நீர் எந்தன் வெற்றிக் கொடியுமானீர்
விசாரங்கள் என்னில் பெருகுகையில் உம் விசுவாசம் என்னை தாங்கிடுதே மரணத்தின் தாழ்வறையில் நீதியின் சூரியன் உதிக்க செய்தீர்