என்னை உயர்த்தி மகிழ செய்பவரே
ennai uyarthi magizha seybavarae
என்னை உயர்த்தி மகிழ செய்பவரே என் தலையை நிமிர செய்பவரே நம்பிக்கை இல்லா நெரங்களில் நம்பிக்கை தேவன் நீரே - என் - 2
தள்ளப்பட்ட என்னை தாங்கினீரே உம்மோடு சேர்த்தணைத்தீரே - 2 கண்ணீரை துடைத்தீரே என் வாழ்வை மாற்றினீரே - 2 - நம்பிக்கை இல்லா
நித்திய அன்பை எனக்கு தந்து பாவியான என்னை நேசித்தீரே - 2 உம் ஜீவனை எனக்கு தந்து பரிபூரணப்படுத்தினீரே - 2 - நம்பிக்கை இல்லா