என்னை உருவாக்கினீர்
ennai uruvaakkineer
என்னை உருவாக்கினீர் உந்தன் வார்த்தையால் என்னை உயிர்பித்ததும் உந்தன் வார்த்தையால் - 2 எனை ஆற்றினீர் தேற்றினீர் உம் வார்த்தையால் எனை தாங்கினீர் சுமந்தீர் உம் வார்த்தையால் - 2
வார்த்தையானவரே ஆதியில் இருந்தவரே எனக்காய் வந்தவரே எல்லாம் தருபவரே - 2
நீர் செய்வதை யாரால் தடுத்திட கூடும் நீர் சொன்னதை யாரால் எதிர்த்திட கூடும் - 2 நீர் செய்வதை தடுப்பவன் இல்லை சொன்னதை எதிர்ப்பவன் இல்லை வல்லமை நிறைந்த வார்த்தையானவரே - இயேசுவே
நீர் குறித்தத்தை யாரால் அழித்திட கூடும் நீர் உரைத்ததை யாரால் மறுத்திட கூடும் - 2 நீர் குறித்தத்தை அழிப்பவன் இல்லை உரைத்ததை மறுப்பவன் இல்லை-2 வல்லமை நிறைந்த வார்த்தையானவரே - இயேசுவே