என்னை உம் கையில் தருகின்றேன்
ennai um kaiyil tharugindren
என்னை உம் கையில் தருகின்றேன் ஏக்கமாய் உம்மண்டை வருகின்றேன் என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த பெலத்தோட செல்கின்றேன்
என் அன்பே ஆருயிரே - என்றும் உம் மடியில் தலை சாய்ப்பேனே
நான் உம்மை அறியவில்லை நீர் என்னை அறிந்தீரே - இந்த சிறியனை உம் பக்கம் இழுத்தீரே என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த பெலத்தோட செல்கின்றேன்
தகுதியற்ற என்னை கண்டீர் கிருபை தந்து உயர்த்தி வைத்தீர் உந்தன் சித்தம் செய்ய அபிஷேகம் அருளினீர் என்னை அழைத்தவர் நீரல்லோ இந்த பெலத்தோடே செல்கிறேன்