என்னை தந்தேன் இயேசுவே
ennai thandhen yesuvae
என்னை தந்தேன் இயேசுவே தந்தேன் இயேசுவே ஏற்றுக்கொள்ளும் என் நேசரே உம்மை போல மாற்றிட என்னை மாற்றிட உம் ஜீவன் தந்தீரே - 2
இயேசுவே ஏற்றுக்கொள்ளுமே இயேசுவே என்னை மாற்றுமே என் இயேசுவே
ஆவியில் நிறைந்து ஜெபித்திட வல்லமை தருபவர் நீரே - 2 ஆவியில் நான் பெலப்படவே உம் அக்கினியை ஊற்றுமைய்யா
ஈசாக்கின் தேவன் நீரே யாக்கோபின் தேவன் நீரே -2 உயிரில் கலந்து உறவாடிட உம் இரத்தம் சிந்தினீர் இயேசுவே - என் - 2
ஒருவரும் சேரா ஒளியினில் வாசம் செய்பவர் நீரே - 2 கேரூபீன்கள் சேராபீன்கள் அல்லேலூயா பாடிடுவார் - 2