என்னை தாய்ப்போல் நேசிக்கிறீர்
ennai thaayppol nesikkireer
என்னை தாய்ப்போல் நேசிக்கிறீர் உந்தன் தோள் மேல் சுமந்திடுவீர் உம்மை நாளும் தொழுதிடுவேன் யெகோவா யெகோவா
1. அலைகள் பொங்கி வருகையில் நீர் என்னோடு இருக்கிறீர் கடக்க முடியாமல் தவிக்கையில் உம் கரத்தினில் எடுக்கிறீர் - என்னை தாய்ப்போல்
2. கலங்கி நிற்கும் வேளையில் என் கண்ணீரை துடைக்கிறீர் கைவிடப்பட்ட நிலையினில் உம் மார்போடு அணைக்கிறீர் - என்னை தாய்ப்போல்