என்னை சுற்றிலும் இயேசு உண்டு
ennai sutrilum yesu undu
என்னை சுற்றிலும் இயேசு உண்டு என் முன்னே செல்கின்றாரே - (2)
ஆராதனை - (4)
பார்வோன் வந்தால் என்ன பெரும் படையோடு வந்தால் என்ன-(2) ஜெபித்திடுவேன் ஜெயம் எடுப்பேன் செங்கடல் பிரிந்திடுமே-(2)
பாலைவனம் வந்தால் என்ன என்னை படைத்தவர் என்னோடு உண்டு-(2) பாடிடுவேன் பாதை காட்டிடுவார் பயணத்தை தொடர்ந்திடுவேன்-(2)
மகிமையின் தேவன் நீரே மன்னாவை தருகின்றீரே-(2) மறவாத எபிநேசரே என் மனமகிழ்ச்சி நீர்தானையா-(2)
வாக்குத்தத்தம் செய்தவரே வாக்குத்தத்தம் நிறைவேற்றுவீர்-(2) உம்மையே நான் நம்பியுள்ளேன் உம் கிருபை சூழ்ந்து கொள்ளும்-(2)