என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
ennai pelappaduthum kiristhuvinaal
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய பெலணுன்டு என்னை திடப்படுத்து தேவனால் எதையும் வென்றிடுவேன்
தோல்வி எனக்கில்லையே – நான் தோற்று போவதில்லையே ஜெயம் தரும் தேவன் வெற்றியைத் தந்திடுவார்
பிசாசை வென்றிடுவேன் சாத்தானை ஜெயித்திடுவேன் கர்த்தரின் நாமத்தில் ஜெயித்திடுவேன் தோல்வியை ஜெயமாக மாற்றிடுவேன்
கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எந்தன் ஆதாயம் நித்திய ஜீவன் பெற்றிடுவேன் ஜெயவேந்தனோடு வாழ்ந்திடுவேன்
மதிலைத் தாண்டிடுவேன் எரிகோவைத் தகர்த்திடுவேன் செங்கடல் பிளந்திடுவேன் யோர்தானைக் கடந்திடுவேன்