என்னை பெலப்படுத்துகிற
ennai pelappaduthugira
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு
1. நான் எந்த நிலமையில் இருந்தாலும் நான் மனரம்மியமாய் இருக்கின்றேன் பட்டினியாய் இருந்தாலும் பரிபூரண மடைந்தாலும் தாழ்ந்திருக்கவும் வாழ்ந்திருக்கவும் போதிக்கப்பட்டேன் - நான்
2. என் தேவன் யேகோவா யீரே என் தேவன் யாவையும் தருவாரே தமது ஐசுவரியத்தின்படியே எனது குறைவை நிறைவாக்கும் இயேசுவை விசுவாசித்தே தேவ மகிமையை காண்பேன்-நான்
3. நான் சோம்பலின் அப்பம் புசியாமல் நான் சோர்ந்து தரித்திரமடையாமல் உற்சாகமாக உழைத்திடுவேன் உண்மை ஊழியம் செய்திடுவேன் தேவனை அதிகாலை தோறும் தேடி கண்டடைவேன் - நான்
4. நான் கர்த்தருக்கு காத்திருந்தே நான் புதுபெலனை அடைந்திடுவேன் கழுகு போல செட்டைகளை அடித்து நானும் எழும்பிடுவேன் நடந்திட்டாலும் ஓடினாலும் சோர்ந்திட மாட்டேன் - நான்
5. நான் இயேசுவை மிக நேசிக்கிறேன் நான் அவருக்காகவே ஜீவிக்கிறேன் அனேக எதிர்ப்புகள் மத்தியிலும் அதிக ஊழியம் செய்திடுவேன் என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் என் பட்சம் நிற்பார் - இயேசு
6.என் இயேசு சீக்கிரம் வருவாரே நான் அவருக்காகவே காத்திருப்பேன் அவனவன் கிரியைப்படியே அவர் அருளும் பிரதிபலனே ஆண்டவர் வரும்போது தம்முடன் கொண்டு வருவாரே - இயேசு