என்னை பரிசுத்த படுத்தும் தேவனே
ennai parisutha paduthum devanae
என்னை பரிசுத்த படுத்தும் தேவனே உம் திருவடி பணிந்து கெஞ்சுகிறேன்!
1. மாமிச சிந்தை மரணமே: ஆவியின் சிந்தை யோ ஜீவன் தரும். மாமிச சிந்தனைகள் அகல வே ஆண்டவர் பெலன் தாருமே.
2. இதயத்தை வெண்மையாக மாற்றிடும் இறைவா! உம் இரத்தத்தால் கழுவிடும்; இதயத்தை உம் அன்பால் நிறைத்திடும், இயேசுவே வந்தாளுமே.
3. பாய்ந்திடும் உலகக் கண்ணிகளில் மயங்கிடா வண்ணம் நீர் காத்திடுமே; மாளா உம் கிருபையை பொழிந்திடும் மன்னவா! என்றென்றுமே.
4. நடைபாதை தவறும் நேரங்களில் நலமான வழிகளில் திருப்பிடும்; நல்லாலோசனை என்றும் தந்திடும் நாதனே நீர் நடத்தும்.
5. கலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்கையில் கரம் பற்றியே என்னை அணைத்திடும் களிப்புடன் வருகையில் எதிர் நோக்கி கர்த்தாவே! கிருபை தாரும்.