என்னை ஒப்புவித்தேன்
ennai oppuvithen
என்னை ஒப்புவித்தேன் நின்னடி வந்தேன் இறைவா உந்தன் அருளையே நாடுவேன்
கொல்கோதாவில் என்னை சிலுவையிலே இயேசுவே நீர் மன்னித்தீர் கிருபையின் தயாளனே
என்னை இரட்சிக்கவே சுமந்தீர் நிந்தைகள் இயேசுவே நீர் என் பாவங்கள் ஏற்றீர் கல்வாரியில் இரத்தம் வழிந்தோடவே மரித்தீரே நீர் எனக்காய் கருணையின் மறைவிடமே
உம்மைப்போல் தூயனாய் நானென்றும் வாழ்ந்திட அர்ப்பணம் செய்தேன் உம் ஆவி ஆட்கொள்ள படைத்தேனே என்னை உம் பலிபீடத்தில் மகிழ்வோடு நாடுவேன் பணிவேன் உம் பாதமொன்றே