என்னை நீர் அறிந்தவர்
ennai neer arindhavar
என்னை நீர் அறிந்தவர் என்னுள்ளம் புரிந்தவர் -2
தாயினும் மேலானவர் தந்தையைப் போல் தூக்கி சுமப்பவர்-2
தூரத்திலிருந்தும் என் நினைவினை அறிகின்றீர் சோர்ந்திட்ட நேரமெல்லாம் புதுபெலன் எனக்களித்தீர்-2 கண்ணீரை கணக்கில் வைத்தவர் எந்தன் கதறுதல் கேட்டறிந்தவர்-2
தூசியும் சாம்பலுமாய் குப்பையில் கிடந்த என்னை ஆயிரமாய் மாறும் அபிஷேகம் ஈந்தளித்தீர்-2 நன்மைகள் எண்ணிப் பாடுவேன் என்றும் நல்லவரே உம்மை போற்றுவேன்-2
கோழி தன் குஞ்சுகளை சிறகினால் அணைப்பது போல் பயந்திட்ட நேரமெல்லாம் வார்த்தையால் வாழ்வு தந்தீர்-2 என் வாழ்வில் மாற்றம் தந்தவர் என் நேசர் நேற்றும் இன்றும் மாறிடாதவர் -2