என்னை நீங்க மறக்கவில்லை
ennai neenga marakkavillai
என்னை நீங்க மறக்கவில்லை இயேசப்பா இது வரையிலும் என்னை நடத்துகின்றீர் இயேசப்பா
1.எனக்கு உருவம் தந்து உருவாக்கினீர் இயேசப்பா தாயின் கருவினிலே என்னை கண்டீர் இயேசப்பா
2.அறியாத காலங்களில் துரோகியாக வாழ்ந்த என்னை உமது கிருபை தந்து மீட்டு கொண்டீர் இயேசப்பா
3.உண்மை விட்டு வழி விலகி தூரம் நான் சென்றாலும் என்னிடத்தில் அன்புகூர்ந்து அனைத்து கொண்டீர் இயேசப்பா
4.தாழ்மையில் இருந்த என்னை நினைவு கூர்ந்தீர் இயேசப்பா ஏழ்மையை நீக்கி என்னை உயர்த்தினீரே இயேசப்பா
5.குறைவில்லா நன்மைகளை தினமும் தந்தீர் இயேசப்பா கூப்பிடும் போதெல்லாம் உதவிசெய்தீர் இயேசப்பா
6.அப்பா பிதாவே என்று உரிமையோடு நான் அழைப்பேன் ஆண்டவர் மார்பினிலே சாய்ந்து என்றும் வாழ்ந்திருப்பேன்