என்னை நடத்தும் வெளிச்சமே
ennai nadathum velicchamae
என்னை நடத்தும் வெளிச்சமே உங்க வார்த்தை சத்தியமே-2
உம்மை விட்டு நான் எங்கே போவேன்? ஜீவ வார்த்தை உம்மிடம் உண்டு உம்மை விட்டு நான் எங்கே போவேன்? நித்ய ஜீவன் நீர் தானே நித்ய ஜீவன் நீர் தானே-(2)
1.வாக்குத்தத்தம் தந்து நடத்தி வார்த்தையால் சொன்னதை செய்கின்றீர்-2 வல்ல தேவனே உம் செயல்கள் இன்றும் என்றும் அது அற்புதமே-2 நீர் என்றுமே அற்புதமே-2 -உம்மை விட்டு
2.சிறுமையும் எளிமையும் ஆன என்னை ஒருபோதும் நீர் மறப்பதில்லை-2 கூடவே இருந்து தினம் நடத்தி சுகமாய் என்னை காக்கின்றீர்-2 பிள்ளையாய் என்னை காக்கின்றீர்-2-உம்மை விட்டு