என்னை காண்பவரே
ennai kaanbavarae
என்னை காண்பவரே என்னை காப்பவரே என்னில் வாழ்பவரே உம்மை ஆராதிப்பேன் - 2
ஜீவனின் ஒளியுமானவரே ஜீவ அப்பமும் ஆனவரே வழியும் சத்தியமுமானவரே வாழ்நாளெல்லாம் என்னை சுமப்பவரே
கல்வாரி சிலுவையில் மரித்தவரே கலங்கிடும் பாவியை மீட்டவரே மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே மூன்றில் ஒன்றான மெய் தேவனே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே - 4