என்னை அழைத்த மா தேவ தயா
ennai azhaitha maa deva thayaa
என்னை அழைத்த மா தேவ தயா என்றும் புகழ்ந்திடுவேன்!
கன்மலை கிறிஸ்துவே கண்டேன் உம்மிலே கிருபையின் நதியே!
1. கைவிடேனே உன்னை என்றும் என் உள்ளங்கைகளில் வரைந்திட்டேனே கண்மணி போல் காவல் செய்குவேன் என்றதால் கனிவுடனே துதிப்பேன்
2. தீயோனெமக் கெதிராய் உருவாக்கிடும் ஆயுதங்கள் அறவே வாய்த்திடாதே புது சக்தியால் நிறைத்தென்றும் ஜெயத்துடன் நடத்துகிறீர்
3. அநாதியாய் உம்மிலே மறைந்திருந்த அநந்த ஞானமதை என்னில் விளங்கிடச் செய்யும் -இக் கிருபையை எண்ணியே துதித்திடுவேன்
4. தேவ மகிமையின் நம்பிக்கையதிலே ஜீவியம் செய்திடவே முற்றுமாய் உம்மிலே தேறினோனாய் நிலை பெற்று வளர்ந்திடுவேன்
5. ஆனந்தமும் அகமகிழ்வும் ஆர்ப்பரிப்பும் ஆன சுகம் பெலனும் ஞானமும் சீயோனின் மாவல்ல அரணும் பொன்னேசுவே நீரெனக்கு