எந்நாளும் துதிக்க வேணும்
ennaalum thudhikka venum
எந்நாளும் துதிக்க வேணும் - நாதனை எந்நாளும் துதிக்க வேணும் வந்தனம் பாடி மன்னன் முன் கூடி மயக்கமகற்றி திரு முன்னில் - நன்றியுடனே
1. ஆனந்தமாய் கூடுவோம் - பரனை வெகு சத்தமாய் பாடிடுவோம் கீத கணம் தேடி நாதனை நாம் பாடி நா தாமவரின் திரு நாமமே கதியாய் நாடி
2. சர்வ வல்ல நாயகன் - அவர் நமது நல்ல குண போதன் நிச்சயம் தாசர்க்குச் சித்தம் வெளியாக்கி கஷ்டத்தில் நின்றவரை முற்றும் விடுவிப்பவர்
3. தம்மை போற்றித் துதிக்கும் - ஜனங்கள் பாரம் தாமே சுமந்திடுவான் ராஜாதி ராஜாவாக என்றுமே வாழ்ந்திடுவேன் நன்றியோடு எல்லோருக்கும் இயேசுவை வணங்குவோம்
4. சிருஷ்டிகளின் நாதனே - ஜெயம் பெருகும் தூதர்கள் ராஜனே ஜீவனின் ஊற்றாமே ஜீவ லோக ஈசனே ஜீவனளிக்கச் சொந்த ஜீவனை கொடுத்தவர்
5. தேவ மகிமைக்காய் நாம் - தொடர்ந்து செய்தால் என்றும் திவ்யானந்தமாம் உன்ன தான் தன்னுடைய சன்னதியில் நின்று நாம் மன்னவனே புது பாட்டு வந்தனங்களோடே நிற்போம்