என்ன தான் பதில்
enna thaan padhil
என்ன தான் பதில் செய்வேன் கண்டிடும் வேளை அன்னையே பதில் கூறும் செய்வேனிவ் வேழை
1. எண்ணொணாப் பாவத்தால் உம்மை வாதித்தேனையா மன்னித்தீர் என்னையும் மாதயவதாகவே - என்ன
2. அண்டினேன் பாதமே ஆண்டுகொள்ளுவீரே நன்றியால் பொங்குதுள்ளம் என்ன பதில் செய்வேன் - என்ன
3. நானிலம் தன்னில் நிந்தையாகினாலுமே நாதனே! நான் விடேன் நசரேயன் பாதமே - என்ன
4. ஏதுக்கும் உதவா ஏகலித்த ஏழை யான் ஏற்றீரோ என்னையும் சேர்த்தீரோ மந்தையில் - என்ன
5. இன்னிசைக் கேட்டாலும் இன்பமுண்டோ பாவியில் விண்ணெனைச் சேர்க்கவுயிர் சிலுவையில் விடுத்தீர் - என்ன
6. கன்னத் தறையையும் கனமான குருசையும் அன்பாலோ சகித்தீர் அன்பனே, அன்பனே - என்ன