என்ன தான் நேர்ந்தாலுமே
enna thaan nerndhaalumae
என்ன தான் நேர்ந்தாலுமே என் இயேசு என்னோடுதான் கஷ்ட பாடு பெருகிடினும் காக்கும் கரமது என்னோடு தான்
உங்க அழைப்பின் சேவையை பின்பற்றுவேன் நம்பி தந்த பொறுப்பை நான் நிறைவேற்றுவேன்
1. தேவைகள் பெருகி கலங்கும் போது என் சார்பில் செயலாற்றுவீர் தோல்வியால் என் உள்ளம் சிதைந்திடும் போது உம் தோள்களில் இடம் தருவீர் (2) உம்மை நம்பியுள்ளேன் உம்மை பற்றிக்கொள்வேன் (2) ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர்(2)
2. போராட்ட அலைகள் என் மேல் அடிக்கையில் எனக்காக யுத்தம் செய்வீர் எதிரான நாவுகள் உள்ளத்தை உடைக்கையில் எனக்காக வழக்காடுவீர் (2) என்னை அழைத்தவரே எந்தன் ஆதாரமே (2) மீண்டும் எனக்காக வருபவரே (2)