என்ன சொல்லி தேவன்
enna solli devan
என்ன சொல்லி தேவன் அன்பை பாடி நன்றியோடு மகிழுவேன் இன்னல் யாவும் அகன்ற புதுமை மன்னனவர் மகிமையே
பிறந்தார் இயேசு பிறந்தார் உதித்தார் மனதில் உதித்தார்
மனிதன் வாழ உலகில் தேவன் மகிமை யாவும் துறந்தார் இனிதாய் நாமும் புதிதாய் வாழ்வு பெறவே இயேசு பிறந்தார் கனிவாய் நமது இதயம் தேடி இதமாய் வந்து அமர்ந்தார்
கவலை என்னை அணுகும்போது கனிவாய் தாமும் வருவார புயலாய் துயரம் வாழ்வில் வீசும் அருகில் நின்று காப்பார் இமைகள் கண்ணை காக்கும் தேவன் அதுபோல் என்னைக் காப்பார