என்ன செய்வேன் இன்ப
enna seyven inba
என்ன செய்வேன் இன்ப இயேசு வே என்னும் நேசித்தீரோ அன்னையே அலைபோல் அன்பிதோ பொங்குதே அனந்த ஸ்தோத்திரமே
1. ஞானக்கண் மலையாம் கிறிஸ்து எனக்கு பானமானீர் பாதையிலே போஷித்தென்னையும் வான மன்னாவால் ஷேமமாய் சேர்ப்பீரே ஆத்துமமதையே - ஆ ஆ ஆ ஆ - என்ன
2. வீசிப் பறக்குதே நேசக் கொடியே நீசன் எந்தன் மீதில் ஜெகந்தனிலே நின் நாமமுயர ஜெயத்தின் கொடியே நாட்டியே மகிழ்வேன் - ஆ ஆ ஆ ஆ - என்ன
3. ஜீவனூதியே பின்மாரி மழையாய் தேவ ஆவி பிழிந்திடுவீரே இதுவரையும் இவ்விக மரியா அதுபோல் நதியாய் பாய்ந்துமே வருவீர் - ஆ ஆ ஆ ஆ - என்ன
4. ஆக்கமாகும் உந்தன் சபையதுவை சேர்க்கும் வேலை நெருங்கிடுதே நீதியதிலே நின் முகங் கண்டேன் நிதமும் உமது சாயலாய் மாறுவேன் - ஆ ஆ ஆ ஆ - என்ன
5. பார் பரிசுத்தர் ஆவல் மிகவே பார்த்து பார்த்து ஏங்கிய நிற்கிறார் தீரவில்லையா சீயோனின் வேலையே வாரும் என் இயேசுவே தீர்ப்பீரே வாஞ்சையே - ஆ ஆ ஆ ஆ