என்ன கொடுத்தாலும்
enna koduthaalum
என்ன கொடுத்தாலும் அது ஈடாகிவிடுமா (2) என் இயேசு அப்பா எனக்கு செய்த நன்மைக்கு (2) துதிப்பேன் துதிப்பேன் நான் துதிப்பேன் இயேசு ராஜாவை துதிப்பேன் (2)
1.தனிமையின் பாதையிலே கூட வந்தீரே தள்ளாடிநடந்த என்னைத் தாங்கிக்கொண்டிரே (2) உம் தோளின்மேலே சுமந்துகொண்டிரே உம் கிருபையினாலே நடத்தி வந்தீரே(2) உயிரே உறவே உயிரே உறவே
2)கலங்கின நேரங்களில் தேடிவந்தீரே கண்ணீரைக் கணக்கிலே வைத்துக்கொண்டிரே (2) என் கதறலை எல்லாம் கேட்டறிந்தீரே என் ஜெபங்களுக்கெல்லாம் பதிலளித்தீரே (2) உயிரே உறவே உயிரே உறவே