என்ன என் ஆனந்தம் என்ன
enna en aanandham enna
1. என்ன என் ஆனந்தம் என்ன என் பேரின்பம் விண் துயரோடு சேர்ந்து நானும் அன்பரைப் பாடிடுவேன்
2. இத்தரை யாத்திரையில் முற்றிலும் போராட்டமே மற்றும் வெற்றி பெற்றவர்கள் நித்திய மகிமையை
3. ஈலோக ஜீவனே புல்லுக்கு ஒப்பான தே வாடிப்போகும் பூவை போல மாய்ந்து போகுமே
4. இப்பாழுலகத்தில் ஆசை ஒன்றுண்டோ பஞ்சு போல் பறந்திடும் இப்பாழுலகமே
5. மண்ணான இந்த உடல் மண்ணாக போய்விடும் எக்காளம் முழங்கும் போது மகிமையே டெழும்பும்
6. வீணை சத்தமும் தம்புரு முழக்கமும் என் நேசர் சமூகம் என்ன இன்பம் சொல்லரியாதே
7. பொற்தளமாம் வீதி இங்கிதசாலேமிலே பொன்னேசரோடு நின்று நானும் ஓடியுலாவிடுவேன்
8. சித்தர் யாவரும் விண் ஜோதியிலென்றும் கர்த்தாவின் சுகந்தன் மகிழ்ந்து பூரிப்பார்
9. என் நேசர் மார்பினில் நான் சாரும் நேரமே ஆ என்ன இன்பம் என்ன மதுரம் சொல்லரியாதே