என்ன அழகு இயேசுவின்
enna azhagu yesuvin
என்ன அழகு இயேசுவின் கண்கள் - (2) அக்கினி மயமான அழகு கண்கள் என்னை உற்று நாேக்கி ஆழம் அறியும் கண்கள் -(2)
என் பாவம் பாேக்கும் பரிசுத்த கண்கள் என் ஜீவன் காக்கும் ஜீவ கண்கள் என் பாதை நாேக்கும் தேவ கண்கள் என் அன்பரின் அழகு கண்கள் - (2)
பூமி எங்கும் உலாவும் கண்கள் அதின் குடிகளை ஆராயும் கண்கள் உறங்காது என்னை காக்கும் கண்கள் என் இனியரின் இனிய கண்கள் - (2)
பாலினால் கழுவிய கண்கள் நேர்த்தியாய் பதித்த ஒப்பற்ற கண்கள் நதி ஓரம் தங்கும் புறாக் கண்கள் என் ராஜாவின் ராஜ கண்கள் - (2)
நீதியையே பேசிடும் கண்கள் அனுதினம் என்னாேடு உறவாடும் கண்கள் என் உயிராேடு கலந்த கண்கள் என் உயிரான இயேசுவின் கண்கள் - (2)