என்மேலுள்ள நின் சர்வ
enmelulla nin sarva
1. என்மேலுள்ள நின் சர்வ நன்மைகளுக்காக நான் என்ன செய்வேன் உனக்கேன் இயேசுபரா? - இப்போ
2. நன்றியால் எந்தன் உள்ளம் பொங்கி வழியுதே இன்று வரையும் என்னைக் காத்த தாலே-தேவா!
3.பாவத்தினின்று எந்தன் ஆவி உயிர்ப்பிக்க சாப் சிட்சை சகித்த தேவ சுதா மகா
4. என்ன அனுதினம் அன்போடு நடத்திடும் பொன் இயேசுவே! அனந்தம் ஸ்தோத்திரம் - எந்தன்
5. முற்றுமுடிய என்னைக் காத்து நடத்திடச் சத்துவம் ஈந்திடும் நல் நண்பன் நீரே-திருச்
6.தாதன் வலப்புறத்தில் நாதன் நீர் ஏழைக்காய் பாதம் வேண்டி நிற்கும் பாக்கியமே -பொன்னின்
7.குற்றம் குறைகள் இன்றிக் கோதில்லா ஜோதியில் முற்றும் என்னை நிறுத்த வல்லவர் -தேவா!
8. இந்த நிலம் தன்னில் ஏழை தங்கிடும் நாள் எல்லாம் ஏத்துவேனே உம் திரு நாமமதை - ஏழை