என்மேல் பாராட்டின
enmel paaraattina
என்மேல் பாராட்டின உமது அன்புக்கு - ஈடாய் என்ன நான் செய்திடுவேன் இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி பொன்னு நாமத்தை புகழ்ந்திடுவேன்.
மா பாவியாம் என்னை நினைக்க மண்ணான நான் எம்மாத்ரம் ஐயா - தேவ தூதரிலும் மகிபனாய் என்னை மாற்றின அன்பை துதிப்பேன்.
யேகோவா என்னும் நாமமுள்ளோரே உமது சமூகம் இன்பமே அழுகை நிறைந்த பள்ளத்தாக்கை நீரூற்றாகவே மாற்றுகிறீர்
இயேசுவே உந்தன் மாசில்லா ரத்தம் எந்தனுக்காக சிந்தினீரல்லோ கோரப்பாடுகள் யாவும் சகீத்தீர் அத்தனையும் எனக்காவே