எனில் வாரும் என் இயேசுவே
enil vaarum en yesuvae
எனில் வாரும் என் இயேசுவே என்றும் என்னோடு உறவாடவே நீரின்றி ஒன்றில்லையே இங்கு நீர்தாமே என் எல்லையே
என் நெஞ்ச வீட்டினில் என் இன்ப பாட்டினிலே உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீ வாழவே என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே ! தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2 உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே
பயணம் தான் நான் செல்ல பாதையும் நீயாகவே வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே தேவா எழுந்து வா .