எங்கராசா இயேசு ராசா
engaraasaa yesu raasaa
எங்கராசா இயேசு ராசா தங்கமான சாரோனின் ரோசா ஏழைங்க எங்க வாழ்க்கையில் இன்பம் சேர்த்திட வந்தவராம் பாமர சனங்களின் பாதையை முழுசா மாத்திட வந்தவராம்
பாவம் இனிமேல் ஏது அந்த பாரம் இனி கிடையாது இரட்சிப்பு என்று சொல்லுற சொல்லு சும்மா இங்க வரல சிலுவை மரத்திலே தொங்கி இயேசு ராசன் இரத்தத்தை சிந்தி உன்னையும் என்னையும் பரலோகம் சேர்க்கவே உசிர விட்டாரே
கவலை கஷ்டம் தொல்லை அந்த சுவடே இனிமேல் இல்லை சத்தியம் பண்ணி சொல்வேன் அந்த பயமே இனிமேல் இல்ல ஆடுங்க ஆடுங்க தோள் தட்டி இத பாடுங்க பாடுங்க கை தட்டி எந்நாளும் கொண்டாட்டம் என்றென்றும் பேரின்பம் ஆனந்தம் ஆனந்தமே