எங்களுக்காய் மரித்தவரே
engalukkaay marithavarae
எங்களுக்காய் மரித்தவரே மூன்றாம் நாள் எழுந்தவரே உயிரோடு இருப்பவரே இன்று எங்களோடு வாருமையா.
1.முழங்கால்கள் முடங்குதையா கைகள் உயருதையா துதி சத்தம் இன்றே எழும்புதையா தூதர்கள் பாஷை கிடைக்குதையா இயேசுவே-8
2.பரிசுத்தர் நீர் தான் ஐயா பரிகாரி நீர் தான் ஐயா பிரதான ஆசாரியர் நீர் தான் ஐயா பரிந்து பேசுபவர் நீர் தான் ஐயா. இயேசுவே-8
3. எங்களுக்குள் இருப்பவரே உலாவி வருபவரே ஆவியினாலே நிரப்புமையா அனல் மூட்டி எம்மை எழுப்புமையா இயேசுவே-8